Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திங்கள், 28 அக்டோபர், 2013

பண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவு

உலக இயற்கை மனிதனுக்கு காலம் காலமாக பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எந்தப் பொருளையும் பண்படுத்தப் பண்படுத்த அதன் தரம் உயரும் என்பது அதில் ஒன்றாகும். அதில் என்ன வியப்பு என்றால் மனிதனை இன்றும் இயற்கையே பண்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையின் பண்படுத்தலின் போது மனிதன் கற்றுக் கொண்டதே மொழியாகும். மொழியைக் கற்றுக்கொண்ட போதே, மனிதன் படிப்படியாக கலைகளை வேறுபடுத்திக் கற்கவும் தொடங்கினான். பேச்சு மொழி பிறக்க முன் மனிதன் பேசிய மொழி, சைகைமொழியாகும்.  அந்த சைகைமொழியே நடிப்புக் கலைக்கு வழிவகுத்தது. உணவுக்காக, உறவுக்காக அவன் இட்ட கூக்குரல் மொழியாகவும், இசையாகவும் மாறியது. ஆதிமனிதன் ஏழுப்பிய ஓசை, இசை, அசைவு மூன்றும் சேர்ந்தே மொழியானது. அதனால் அவன் பேசிய மொழியில் சொற்கள், இசை, நடிப்பு என்ற முக்கூறுகள் பிறந்தன. 

ஆசைக்கவிதைகள் - 47

ஆசைக்கவிதைகள் - 47


தென்கடல் தான் அடங்கிடுமா?



















உலகவரலாறும் இலக்கியங்களும் தென்கடலால் ஏற்பட்ட அழிவுகளைச் சொல்கின்றன.  கதிர்காமத்தின் நாட்டுப்பாடலான இதுவும் தென்கடலின் சீற்றத்தை “தென்கடல்தான் அடங்கிடுமா?” என்று அங்கு வாழ்ந்த தமிழ்மக்களின் நெஞ்சத்து ஏக்கத்துடன் எடுத்துச் சொல்கிறது.

ஆசைக்கவிதைகள் - 48 மயிலாடு குளமும் கண்டேன்

ஆசைக்கவிதைகள் - 48


மயிலாடு குளமும் கண்டேன்
Photo: source colourbox.com




















ஆசைக்கவிதைகள் - 72

ஆசைக்கவிதைகள் - 72

துடிக்குதடி என்மனசு! 

பொலநறுவையில் வாழ்ந்த காதலன் ஒருவன், திருமணத்தின் பின் காதலியுடன் மகிழ்ந்து வசதியாக வாழ்வதற்காக பொருள்தேட இன்னொரு நாட்டிற்குச் சென்றான். அவன் வருவதாகச் சொன்ன நாளும் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. அவனது வரவை நாளும் நாளும் எதிர்பார்த்திருந்த காதலி, தனது மனத்துடிப்பைத் தோழிக்குச் சொல்கிறாள்.

நாட்டுப்பாடல் (வள்ளியூர்) /பண்டிதர் மு ஆறுமுகன்

ஆசைக்கவிதைகள் - 73

நாத்துநட போரவரே!

அந்நாளில் வள்ளியூரில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், முதல் நாளே பாத்திகட்டி நீர் இறைத்து நாற்று நடுவதற்காக வயலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தான். அடுத்த நாள் காலையில் அவன் வண்டியில் போவதைக்கண்ட அவனது மாமன் மகள் ‘பாத்தியில் அவன் கட்டிவைத்த நீரெல்லாம் உடைத்துக் கொண்டு ஓடிவிட்டது என்றும், மீண்டும் அவன் நீர் இறைப்பதற்கு தான் உதவலாமா [கை கொடுக்கலாமா] எனக்கேட்கிறாள். 

புயலடித்துச் சென்ற வள்ளம்/ பண்டிதர் மு ஆறுமுகன்

புயலடித்துச் சென்ற வள்ளம்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 11/02/1951]
                    
புயல் அடித்தது! பெரும் புயல். 
அது ஆயிரத்துத் தொளாயிரத்து இரண்டாம் ஆண்டு இருபதாந்தேதி அடித்தது.
நயினாதீவிலும் நல்ல புயல்.

புங்குடுதீவு /நாட்டுப்பாடல்கள்

ஆசைக்கவிதைகள் - 68/தமிழரசி ஆறுமுகனார் 

இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த தீவுகளில் புங்குடுதீவும் ஒன்று. அந்தச் சின்னஞ்சிறிய தீவும் தனக்கென கலைப் பண்பாட்டு வரலாற்றை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஊரின் நாட்டுப்பாடல்களும் தத்தமது ஊர்களின் பண்பாட்டை வரலாற்றை எடுத்துச் சொல்லும். நாம் அவற்றை உணராது காலங்காலமாக நாட்டுப்பாடல்களைப் புறக்கணித்து வருகிறோம். அது ஒரு வரலாற்றுப் புறக்கணிப்பு என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?